குடும்பத் தகராறு தொடர்பாக முறைப்பாடு செய்வதற்கு வந்த தம்பதியினர், பொலிஸ் நிலையத்திற்குள் பெண் கான்ஸ்டபிள் ஒருவரின் பணப்பையை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாதுவ குரே மாவத்தையில் வசிக்கும் கணவன், மனைவி இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தம்பதியினர் வாதுவ பொலிஸின் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவுக்கு முறைப்பாடு பதிவு செய்ய வந்திருந்த நிலையில், பெண் கான்ஸ்டபிளின் பணப்பையை, அருகில் உள்ள மேசை லாச்சிக்குள் இருந்து திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.




