காதல் வசப்பட்டு ஓடிப்போன குடும்பப் பெண்கள் மீண்டும் குடும்பங்களுடன் இணைய மறுப்பு!

Date:

தம்மை பிரிக்க வேண்டாம் என்றும், தாங்கள் இருவரும் ஒரே வீட்டில் வாழப் போவதாகவும் தெரிவித்து, பிள்ளைகள் மற்றும் கணவர்களிடம் செல்ல மறுத்த இரண்டு பெண்களை,  கண்டி பொலிஸார் எச்சரித்து, குடும்பத்துடன் ஒன்றிணைத்துள்ளனர்.

29 வயது மற்றும் 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய்மார்களே இவ்வாறு குடும்பத்துடன் இணைய மறுத்து கதறி அழுதுள்ளனர்.

இந்த இரண்டு பெண்களுக்கும் தலா பதினைந்து வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், கணவர்கள் மற்றும் குழந்தைகள் வந்து பெண்களை தத்தமது வீடுகளுக்கு அழைத்துச் செல்ல முயன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். அப்போது, ​​வீட்டுக்கு செல்ல மறுத்த இந்த பெண்கள், ஒருவரையொருவர் பிரிந்து செல்ல முடியாது என போலீசாரிடம் கதறி அழுதனர்.

29 வயதுடைய பெண் ஒரு ஆசிரியை என்பதுடன் 35 வயதுடைய தாய் ஒருவருடன் உறவில் ஈடுபட்டுள்ளார். இவர்கள் இருவரும் காதல் உறவில் ஈடுபட்டுள்ளனர்.

35 வயதான தாய் தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்து சென்ற போது, 29 வயதான ஆசிரியையுடன் அறிமுகமாகி, இருவரும் காதல் கொண்டுள்ளனர்.

இதை தொடர்ந்து, ஒரு மாதத்தின் முன்னர் இருவரும் வீடுகளிலிருந்து வெளியேறி தலைமறைவாகியுள்ளனர்.

காணாமல் போன பெண்களின் கணவர்கள் வத்தளை பொலிஸ் மற்றும் கந்தானை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த முதலாம் திகதி இந்த இரண்டு பெண்களும் கண்டி தலதா மாளிகைக்கு வந்திருந்தனர். அவர்கள் இருவரும் ஒருவரோடுவர் மிக நெருக்கமாகவும், அந்நியோன்யமாகவும் நடந்து கொண்டது, அங்கு கடமையிலிருந்த பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அவர்களை கைது செய்து கண்டி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து பொலிஸாரின் விசாரணைகளின் அடிப்படையில் வத்தளை மற்றும் கந்தானையில் காணாமல் போன பெண்களை இனங்கண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இரு பெண்களும் எச்சரிக்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

 

spot_imgspot_img

More like this
Related

2018 பந்து சேதப்படுத்தலில் முழு அவுஸ்திரேலிய அணியும் ஈடுபட்டது: சுயசரிதையில் உஸ்மான் கவாஜா அதிர்ச்சிச் தகவல்!

2018-ஆம் ஆண்டு நடந்த பந்து சேதப்படுத்தல் விவகாரத்தில் அவுஸ்திரேலிய அணி முழுவதுமே...

ஈரான் அணுசக்தி திட்டம் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 20 மில்லியன் டொலர் வெகுமதி: அமெரிக்கா அறிவிப்பு!

ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த தகவல்களை வழங்குபவர்களுக்கு 20 மில்லியன் டொலர்...

பராகுவேவின் ஜனாதிபதி பதவி நீக்கம்!

ஒரு டிஜிட்டல் வங்கியின் வீழ்ச்சியால் தூண்டப்பட்ட, வேகமாக மாறிவரும் அரசியல் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்