28.1 C
Jaffna
June 21, 2024
முக்கியச் செய்திகள்

எரிபொருள் விலைகளில் திருத்தம்

நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளை திருத்த தீர்மானித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 355 ரூபாவாகும்.

அதேபோல், ஒரு லீற்றர் ஓட்டோ டீசலின் விலை 16 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 317 ரூபாவாக குறைவடையவுள்ளது.

மேலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 202 ரூபாய் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, சூப்பர் டீசல் மற்றும் ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, சினொபெக் நிறுவனமும் தமது எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில் அதன் புதிய விலை 355 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலையில் மாற்றமில்லை.

ஓட்டோ டீசலின் விலை லீற்றர் ஒன்றிற்கு ரூ.19 குறைக்கப்பட்டு, புதிய விலை ரூ.314 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜெய்சங்கரின் முன்பாக வெடித்தது தமிழ் அரசுக் கட்சியின் குழு மோதல்!

Pagetamil

தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கிறார் ஜெய்சங்கர்!

Pagetamil

உக்ரைனில் அமைதி திரும்ப முக்கிய நிபந்தனைகள்: புடின் அறிவிப்பு!

Pagetamil

‘யாழில் டெஸ்ட் மட்ச் கிரவுண்ட் இருக்கிறதா என ஏன் கேட்டேன்?’: சஜித் விளக்கம்!

Pagetamil

‘தமிழ் பொதுவேட்பாளர் இல்லையென்றால் நானே பொதுவேட்பாளராக போட்டியிடுவேன்’: இந்தியாவிலிருந்து வந்ததும் பகீர் கிளப்பும் சிவாஜி!

Pagetamil

Leave a Comment