சங்கிலியனின் 405வது சிரார்த்த தினம்

Date:

யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி சைவத் தமிழ் மன்னன் 2ம் சங்கிலியனின் 405வது சிரார்த்ததின அனுஷ்டிப்பும், நினைவுதினவிழாவும் இன்று யாழில் இடம்பெற்றது.

இலங்கை சிவனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானத்தம் தலமையில் யாழ் நல்லூர் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலிய மன்னன் சிலையடியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது சங்கிலிய மன்னன் சிலைக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இன் நிகழ்வில் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உபதலைவர் ஆறுதிருமுருகன், யாழ் மாநகர ஆணையாளர், சமய பெரியோர்கள், வர்த்தகர்கள் ஊர் மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சங்கிலிய மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து யமுனா ஏரியிலும் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஜமுனைநதி தீர்த்தமும் தெளிக்கப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

டுபாயிலிருந்து ‘தூக்கிவரப்பட்ட’ கொடூரன்: வெடிகொளுத்தி கொண்டாடிய ஊர் மக்கள்!

டுபாயிலிருந்து தனது அடியாட்கள் மற்றும் கூலிப்படையினரைப் பயன்படுத்தி கொலைகள் மற்றும் மிரட்டிப்...

7 நடிகைகள், 9 அரசியல்வாதிகள், 13 சிறை உத்தியோகத்தர்களின் தரவுகள்: கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் வெளிப்பட்ட தகவல்கள்!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில்...

சிரியா மீதான கடைசித்தடையையும் நீக்கியது அமெரிக்கா

திங்களன்று, அமெரிக்கா தனது பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் (SST) பட்டியலில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்