வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தரம் 6 மேல் வறுமைக்கோட்டில் கல்வி கற்கும் பூப்பெய்திய பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் பாவிப்பதற்காக அடையாணைக்கான வவுச்சர்கள் இரண்டு கட்டமாக வழங்க வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வட மாகாணத்தில் மட்டும் சுமார் 31900 பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் கல்விக்காக மாணவிகள் பாடசாலை வருகை தருவதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான வவுச்சர்கள் வழங்க திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில் முதலாம் கட்டமாக வருகின்ற திங்கட்கிழமை (06.06.2024) பாடசாலையில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.




