நடுவீதியில் வெட்டிக்கொல்லப்பட்ட பெண்

Date:

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் ஊழியர் ஒருவர் நேற்று (28) அதிகாலை லியனகேமுல்ல பிரதேசத்தில்  படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் மிகையாக சென்றதையடுத்து இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது.

காலி மேற்கு படுவத்த நெலுவ பிரதேசத்தில் வசிக்கும் திசர மதுவந்தி என்ற 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

சுமார் 6 வருடங்களுக்கு முன்னர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரிந்து வந்த இவர், பின்னர் சீதுவை, லியனகேமுல்ல, ஜூட் மாவத்தை பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தற்காலிகமாக சீதுவையில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் பணிபுரியும் நபருடன் தங்கியுள்ளார்.

இரவு விடுதியொன்றில் இடம்பெற்ற சம்பவத்தை அடிப்படையாக வைத்து இவருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன், கடந்த 28ஆம் திகதி அதிகாலை 2.00 மணிக்கும் 3.00 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் இவரும் அந்த நபரும் புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு முன்பாக நடந்து செல்லும் பாதுகாப்பு கமெரா காட்சிகள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. .

அதன்படி, இந்த தேவாலயத்திற்கு எதிரே உள்ள சாலையின் அருகே பலத்த வெட்டுக்காயங்களுடன் அந்த பெண் கொல்லப்பட்டார்.

நீர்கொழும்பு பதில் நீதவான் திரு.இந்திக்க சில்வா இந்த இடத்திற்கு வந்து ஸ்தல பரிசோதனையை மேற்கொண்டதுடன் அவரது சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

2018 பந்து சேதப்படுத்தலில் முழு அவுஸ்திரேலிய அணியும் ஈடுபட்டது: சுயசரிதையில் உஸ்மான் கவாஜா அதிர்ச்சிச் தகவல்!

2018-ஆம் ஆண்டு நடந்த பந்து சேதப்படுத்தல் விவகாரத்தில் அவுஸ்திரேலிய அணி முழுவதுமே...

ஈரான் அணுசக்தி திட்டம் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 20 மில்லியன் டொலர் வெகுமதி: அமெரிக்கா அறிவிப்பு!

ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த தகவல்களை வழங்குபவர்களுக்கு 20 மில்லியன் டொலர்...

பராகுவேவின் ஜனாதிபதி பதவி நீக்கம்!

ஒரு டிஜிட்டல் வங்கியின் வீழ்ச்சியால் தூண்டப்பட்ட, வேகமாக மாறிவரும் அரசியல் மற்றும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்