இந்திய அணி பயிற்சியாளர் பதவி: மோடி, ஷாருக்கான் பெயரில் போலி விண்ணப்பங்கள்

Date:

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா, ஷாருக் கான் மற்றும் தோனி பெயரில் 3400 போலி விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலை தொடங்கியுள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ). ராகுல் திராவிட் பதவிக்காலம் முடியவுள்ளதை அடுத்து புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வரவேற்று வருகிறது.

இந்த முறை வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிக்க வாரியம் தீவிரமாக இருப்பதாக தகவல் வெளியானது. இந்த பொறுப்பை கவனிக்க சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், டெல்லி கபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பொண்டிங் உள்ளிட்டவர்களின் பெயர் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், ரிக்கி பொண்டிங், ஜஸ்டின் லாங்கர் போன்ற சிலர் பொறுப்பை ஏற்க மறுத்தனர்.

இந்தநிலையில் தான் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா, ஷாருக் கான் மற்றும் தோனி பெயரில் 3400 போலி விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தலைமை பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்க நேற்று முன்தினம் கடைசி நாளாக பிசிசிஐ அறிவித்திருந்தது.

அதன்படி, வந்திருந்த விண்ணப்பங்களை பிசிசிஐ ஆராய்ந்ததில், போலி விண்ணப்பங்கள் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, வீரேந்திர சேவாக், ஷாருக்கான், சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி உள்ளிட்ட பலரின் பெயர்களில் விண்ணப்பங்கள் வந்துள்ளதை அறிந்துகொண்ட பிசிசிஐ அவற்றை போலியானவை என அறிவித்துள்ளது.

கடந்த முறையும் பிசிசிஐ பல போலி விண்ணப்பங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இம்முறையும் போலி விண்ணப்பங்கள் வந்துள்ளததால் அடுத்த முறை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்ய புதிய முறை கடைபிடிக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கறுப்பு ஜூலை , நினைவேந்தல் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி மாபெரும் கவனயீர்ப்பு

கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி இங்கிலாந்து...

திருக்கோவில் விநாயகபுரத்தில் முச்சக்கரவண்டி விபத்தில் ஒரு பெண் உயிரிழப்பு 4 பேர் படுகாயம்

திருகோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதி வீதி வளைவில்; முச்சக்கர வண்டி...

நீர்கொழும்பு சிறைக்கலவரம்: 4 கைதிகள் சந்தேகநபர்களாக அறிவிக்கப்பட்டனர்!

32 பேர் உயிரிழந்த நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்