மானிப்பாய் கிறீன் மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதியில் இயங்கி வந்த இராணுவ முகாமின் மின்கட்டண நிலுவையான நான்கரை இலட்சம் ரூபாவை செலுத்தாமல், அந்த முகாமை விட்டு இராணுவத்தினர் வெளியேறிச் சென்றுள்ளனர்.
தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் ஆயரான டானியல் தியாகராஜாவின் காலத்தில் இருந்து, மானிப்பாய் கிறீன் மருத்துவமனை வளாகத்தின் ஒரு பகுதியில் இராணுவத்தினர் முகாம் அமைத்து தங்கியிருந்தனர்.
அண்மையில் இந்த முகாமிலிருந்து இராணுவத்தினர் வெளியேறியிருந்தனர்.
இராணுவ முகாமின் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா மின் கட்டண நிலுவையை இராணுவத்தினர் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேறிய விடயம் தெரிய வந்துள்ளது.
கடந்த 4 வருடங்களாக அங்கு முகாம் அமைத்து தங்கியிருந்த இராணுவத்தினரே மின்கட்டண நிலுவையை செலுத்த வேண்டுமென தென்னிந்திய திருச்சபையின் பேராயர் பத்மதயாளன் தெரிவித்தார்.