Pagetamil
இலங்கை

‘துரோகியென்று சொல்லிவிடுவார்கள் என பயந்து உண்மையை சொல்ல பயப்பட மாட்டேன்’: எம்.ஏ.சுமந்திரன்!

யாராவது ஒருவர் என்னை துரோகி என்று சொல்லிவிடுவார் எனப் பயந்து உண்மையை சொல்வதற்கு நான் எப்போதுமே பயப்பட்டதில்லை என பாராளுமன்ற உறுப்பினரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு ரணிலின் பயணத்திற்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம் அதை இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள் என நினைப்பதாக ஐனாதிபதி ரணில் முன்னிலையில் நீங்கள் சில தினங்களிற்கு கூறியிருப்பது தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பிதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது-

அந்த தேர்தலில் என்ன நடந்தது என்பது எல்லாருக்கும் தெரிந்த விசயம் தானே. ஆனாலும் கிழக்கு மாகாணம் வாக்களித்தது. கிழக்கு மாகாண மக்களுக்கும் இந்த அறிவித்தல் கொடுத்தாலும் அங்கு மக்கள் வாக்களித்தனர்.

ஏனென்றால் அதை அமுல்படுத்துகிற அதிகாரம் அந்தப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருக்கவில்லை. ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் மக்கள் வாக்களிக்கவில்லை. எனினும் ஒருசிலர் வாக்களித்தவர்கள் என நினைக்கிறேன்.

வாக்களித்த ஒரு சிலரும் அந்த நேரம் நூறுவீதம் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தான் வாக்களித்தவர்கள். ஆனபடியால் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் யாருக்கு அந்த வாக்கு போயிருக்கும் என்பதில் எவருக்கும் எந்தவிதமான சந்தேகமும் இதுவரையில் இருந்த்தில்லை.

ஆனால் இன்றைக்கு ஊடகவியலாளர்கள் தான் இப்படியான சந்தேகத்தை எழுப்புகிறீர்கள். எல்லாருக்கும் தெரிந்த ஒரு விடயத்தை கதைப்பதற்கு பயந்து இதைச் சொன்னால் துரோகி என்று சொல்லிவிடுவீர்கள் என கருதி ஊடகவியலாளரே பயந்திருக்கிற ஒரு சூழலைத் தான் இன்றைக்கு இங்கு கேட்கிற கேள்வி காட்டுகிறதே தவிர எப்படி வாக்கு கொடுக்கப்கட்டிருக்கும் என்பது தொடர்பில் மக்களுக்கு மிகத் தெளிவு இருக்கிறது.

எனினும் நான் எப்போதுமே யாராவது ஒருவர் என்னைத் துரோகி என்று சொல்லிவிடுவார் எனப் பயந்து உண்மையைச் சொல்வதற்கு பயப்பட்டதில்லை என்பதையும் கூறிக்கொள்கிறேன் என்றார்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டக்ளசின் வாகனத்தில் ஐஸ் போதைப்பொருள்: உதவியாளர் கைது

east tamil

நிதி சிக்கலுக்குப் பின் துறைமுக புதைகுழி அகழ்வு மீண்டும் ஆரம்பம்

east tamil

கடந்த ஆண்டில் சிறுவர்கள் தொடர்பாக 8746 முறைப்பாடுகள் பதிவு – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

east tamil

பண்டத்தரிப்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா

east tamil

Update – மாவை. சேனாதிராஜா அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

east tamil

Leave a Comment