ஜனாதிபதி தேர்தலில் சரத் பென்சேகாவும் களமிறங்குகிறார்!

Date:

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜூன் மாதம் இது தொடர்பான முறையான அறிவிப்பை வெளியிடுவார் என்று பொன்சேகாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

பொன்சேகா எந்த அரசியல் கட்சியுடனும் கூட்டு சேராமல் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட உள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் பொன்சேகா பெற முடிந்துள்ளதாகவும், மற்ற அரசியல் கட்சிகளின் எம்.பி.க்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் பின்கதவு பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் வட்டாரங்கள் கூறுகின்றன.

பொன்சேகாவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் ஊழலற்ற நாட்டை ஊக்குவிப்பதுடன் தேசிய பாதுகாப்பிற்கும் முன்னுரிமை அளிக்கும் என்று தெரியவருகிறது.

அவர் தனது பிரச்சாரத்தின் போது புத்திஜீவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் இராணுவத் தளபதி போர் பற்றிய புத்தகமொன்றை விரைவில் வெளியிடுவதன் மூலம் தனது பிம்பத்தை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளார்.

இந்த புத்தகம் மோதல் தொடர்பான தகவல்களையும், அப்போது ராணுவ தளபதியாக அவர் ஆற்றிய பங்கையும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரதிநிதியாக பொன்சேகாவை சந்திப்பதற்கு முன்னாள் இராஜதந்திரி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விக்கிரமசிங்கவை சந்திப்பதை பொன்சேகா நிராகரிக்கவில்லை, ஆனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனது முடிவை வாபஸ் பெறப் போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

பொன்சேகா ஏற்கனவே ஜனாதிபதியுடன் பாராளுமன்றத்தில் கலந்துரையாடியுள்ளதை அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. ஆனால்  கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்த மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.

பொன்சேகா பல இராஜதந்திரிகளுடன் உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும், தனது வரவிருக்கும் அறிவிப்பு குறித்து அவர்களுக்கு விளக்கமளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆதாரத்தின்படி, இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான தனது விருப்பத்தை பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...

LAUGFS எரிவாயு விலையும் குறைந்தது!

LAUGFS எரிவாயு நிறுவனம், இன்று நள்ளிரவு முதல் வீட்டு உபயோக எரிவாயு...

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பித்தலாட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக முறையீடு

‘கரூர் சம்பவத்தில் ஆதவ் அர்ஜுனாவின் மரியாதையற்ற பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்