யாழ் நகரில் மருத்துவபீடத்தின் 8 மாடி கட்டிடத்தை ரணில் திறக்கினார்

Date:

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக் கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

வடக்கு மாகாணத்திற்கு இருநாள் விஜயமாக வருகைதரும் ஜனாதிபதி இம்மாதம் 24ம் திகதி குறித்த கட்டிடத்தை திறந்துவைக்கவுள்ளார்.

இந்த கட்டிடத் தொகுதியில் இரண்டு பெரிய சத்திரசிகிச்சைக் கூடங்கள், ஒரு சிறிய சத்திரசிகிச்சைக்கூடம், எண்டோஸ்கோபி மற்றும் மேமோகிராம், கருவுறுதல் பராமரிப்பு, யூரோடைனமிக் சேவைகள், கேட்போர் கூடம், முதுகலை மையம் மற்றும் மருத்துவ பணியாளர் அறை மற்றும் கற்பித்தல் வசதிகள் உள்ளன.

இந்தக் கட்டிடத்தொகுதி 700 மில்லியன் ரூபாய் செலவில் கல்வி அமைச்சினால் நிதி ஒதுக்கீட்டுக்கமைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பொருட்களின் விலை அதிகரிப்பால் செலவு அதிகரித்து கட்டிடத் தொகுதி இன்னும் நிறைவு பெறாமல் இருப்பதுடன் கட்டிடத்தை முழுமையாக நிர்மாணித்து பூர்த்தி செய்ய 130 மில்லியன் தேவை என கணக்கிடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு வாய்ப்பு மிக குறைவு: ட்ரம்ப்

ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில்,...

விளக்கமறியலில் உள்ள பெண் பொலிஸ் அதிகாரியை பணியிடை நீக்க நடவடிக்கை

மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களுக்குப் பொறுப்பான காவல்துறை பிரதி பொலிஸ்மா அதிபர்...

பிரகீத் எக்னொலிகொட வழக்கில் நீதிமன்றத்தில் நடந்தவை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு, அதன் பின்னர் காணாமல் போன சம்பவம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்