கிளிநொச்சி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் புறக்கணிப்பு!

Date:

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்று வரும் நிலையில் அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் கலந்து கொள்ளவில்லை.

குறித்த கூட்டம் இன்று காலை 9 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று வருகிறது.

குறித்த கூட்டத்தில் விவசாயம், கல்வி, சுகாதாரம், காணி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு வருகிறது.

இதில், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சிறிதரன், அங்கயன் இராமநாதன், மாவட்ட அரசாங்க அதிபர், நிணைக்கள பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் நாடளாவிய ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

“எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே?” – 11ஆவது வாரமாகவும் பலாலி மக்களின் போராட்டம்!

“எங்கள் நிலங்கள் எங்களுடையதுதானே… அது எப்படி உங்களுடையதாகும்?” – 11ஆவது வாரமாகவும்...

மதுபோதையில் வீட்டுக்குள் புகுந்து சேதம்; நெல்லியடியில் பிரதேச சபை உறுப்பினர் கைது

நெல்லியடி நகரில் உள்ள இளைப்பாறிய அரச உத்தியோகத்தரின் வீட்டிற்குள் மதுபோதையில் அத்து...

நிந்தவூர் றிஸாலா இஸ்லாமியக் கல்லூரியில் “மறை போற்றும் மாநபியின் புகழோங்கும் விழா

நிந்தவூர் றிஸாலா இஸ்லாமியக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “மறை போற்றும் மாநபியின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்