சந்தியாகுமாரியின் உயிரைப்பறித்த தயிர் வண்டி!

Date:

தம்புள்ளையில், திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு வீடு திரும்பிய குழுவினரை ஏற்றிச் சென்ற கெப் மற்றும் லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒன்பது பேர் காயமடைந்து தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சீகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹபரணை, ஹிரிவடுன்ன பிரதேசத்தை சேர்ந்த சந்தியா குமாரி என்ற 44 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் பலத்த காயமடைந்த மூன்று வயது சிறுமி கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தம்புள்ளை ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.

தம்புள்ளை இனாமலுவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஹிரிவடுன்ன பகுதிக்கு சென்ற உறவினர்கள் பயணித்த கப் வண்டியும், ஹபரணையிலிருந்து தம்புள்ளை நோக்கி தயிர் ஏற்றிச் சென்ற லொறியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சீகிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

நெல்லியடியில் 16 வயது பாடசாலை மாணவ ஜோடிகள் மாயம்: சிறார் நீதிமன்றத்தில் அறிக்கை!

நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 16 வயதான இரண்டு பாடசாலை மாணவர்கள்,...

பந்தை சேதப்படுத்திய விவகாரம்: கவாஜா கருத்துக்கு வோர்னர் ஆதரவு

கடந்த 2018ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அவுஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ்...

3 பேர் கொலைச்சம்பவம்: சந்தேகநபர்களை பிடிக்க பொதுமக்களிடம் உதவி!

பத்தேகம, வவுலகல பகுதியில் நபர் ஒருவர் மற்றும் இரு பெண்கள் சுட்டுக்கொல்லப்பட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்