Pagetamil
உலகம்

உயிரிழந்த மாமாவை சக்கர நாற்காலியில் தள்ளிவந்து வங்கியில் கடன் பெற முயன்ற பெண்!

பிரேசிலைச் சேர்ந்த பெண், எரிகா டி சோசா வியேரா நூன்ஸ். இவர் சமீபத்தில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

அந்த பேட்டியில், “நான் குடும்பத்தைவிட்டு வெளியேறிய பின் நகர்ந்த நாள்கள், மிகவும் கொடுமையானது. நான் சிகிச்சை பெற்று வருவதால் தூக்க மாத்திரைகளைக் கைதுசெய்யப்பட்ட அன்று சாப்பிட்டிருந்தேன். வழக்கமாக எடுக்கும் அளவை விட இரண்டு மாத்திரைகளை அதிகமாக எடுத்திருந்தேன். அன்றுதான் மாமாவிடமும் பேசினேன்.

எனக்கு வங்கியில் மாமாவின் பெயரில் லோன் எடுக்க வேண்டும். அதற்காகக் கடந்த மாதம், படுக்கையிலிருந்த மாமாவைச் சக்கர நாற்காலியில் அமரவைத்து வங்கிக்கு அழைத்துச் சென்றேன். ஆனால், வங்கி ஊழியர்கள் மாமா இறந்துவிட்டதாகக் கூறினார்கள். எனக்குக் கோபம் வந்தது. மாமா இறந்ததை நான் நம்பவும் இல்லை. மாமாவைத் தலைநிமிர்ந்து பார்க்கச் சொன்னேன். அவர் தலை நிமிரவே இல்லை. அப்போதுதான் வங்கி ஊழியர் ஒருவர் காவல்துறைக்குத் தகவலளித்திருக்கிறார்.

இறந்தவரை அழைத்து வந்து லோன் கேட்டு மோசடி செய்ததாகப் புகார் அளித்திருக்கிறார். அதனடிப்படையில்தான் நான் கைதுசெய்யப்பட்டேன். மருத்துவ பரிசோதனையில் மாமா இறந்து நீண்ட நேரம் ஆனதாகக் கூறினார்கள். ஆனால் உண்மையில் அன்று மாமா இறந்தது எனக்குத் தெரியாது. ஒருவேளை நான் எடுத்துக்கொண்ட மாத்திரையினால் அந்த உணர்வு எனக்கு ஏற்படாமல் இருந்ததா என்று எனக்குத் தெரியவில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் கைது செய்யப்பட்டது தொடர்பாகப் பேசிய காவல்துறை, “கடந்த மாதம் வங்கிக்கு அழைத்துவரப்பட்ட அவரது மாமாவின் உதவியுடன் வங்கிக் கடன் வாங்கச் சென்றிருக்கிறார். அதற்கான அனைத்து ஆவணங்களும் தயார் செய்யப்பட்ட பிறகுதான் மாமாவிடம் கையெழுத்துப் போட வற்புறுத்தியிருக்கிறார். அதைப் பார்த்துச் சந்தேகமடைந்த வங்கி ஊழியர்கள் எங்களுக்கு தகவலளித்தனர். அதனடிப்படையில்தான் அவர் கைதுசெய்யப்பட்டார். விசாரணை, நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்திருக்கிறார்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

18,000 இந்தியர்களை வெளியேற்றவிருக்கும் அமெரிக்கா

east tamil

தாய்லாந்தில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அனுமதி

east tamil

மூத்த ஹிஸ்புல்லா தலைவர் சுட்டுக்கொலை

Pagetamil

தாய்வானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 15 பேர் காயம்

east tamil

அமெரிக்கா உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவதாக டிரம்ப் அறிவிப்பு

east tamil

Leave a Comment