இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என்றும், அவர் இலங்கையின் பிரஜை அல்லாததால், நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என்றும் உயர் நீதிமன்றம் இன்று (08) அறிவித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு தொடர்பான தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று வழங்கியது.
அந்தத் தீர்ப்பின்படி, இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் அமர்வதற்கான சட்டப்பூர்வ தகுதி அவருக்கு இல்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லாததாக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த பெப்ரவரி 13ஆம் திகதி நிறைவடைந்த போதிலும், அதன் தீர்ப்பை அறிவிப்பது உயர் நீதிமன்றத்தால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு, இன்று அறிவிக்கப்பட்டது.