யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் இன்று (8) ஐ.பி.எல் அறிமுகத்தை பெற்றுள்ளார்.
சன்ரைசஸ் ஐதரபாத் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்ட வியாஸ்காந்த் இன்று தனது முதலாவது ஐ.பி.எல் ஆட்டத்தில் ஆடுகிறார்.
நடப்பு ஐ.பி.எல் தொடரின் இன்றைய 57வது ஆட்டத்தில் சன்ரைசஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஆடுகின்றன. ஹைதராபாத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.
இன்றைய ஆட்டத்தில் ஆடும் 11 பேர் விபரத்தை சன்ரைசஸ் அணி வெளியிட்டது. இதில் வியாஸ்காந்தின் பெயரும் இடம்பெற்றது.




