பாம்பு நடனத்தில் விபரீதம்: நாகம் தீண்டி பாம்பாட்டி ராஜ்குமார் மரணம்!

Date:

அம்பாறை, திருக்கோவிலைச் சேர்ந்த பாம்பாட்டி ஒருவர் புத்தல நகரில் இடம்பெற்ற வீதி நிகழ்ச்சியின் போது தனது வளர்ப்பு நாகப்பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார்.

48 வயதான ராஜ் குமார், நன்கு அறியப்பட்ட பாம்பாட்டியாவார். பல பகுதிகளில் தெரு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இவர் 6 பிள்ளைகளின் தந்தையாவார்.

இவர் கடந்த மே 1ஆம் திகதி புத்தல நகரில் உள்ள பேருந்து நிலையம் அருகே பாம்பு நடனம் ஆடிக்கொண்டிருந்தார். அப்போது இரண்டு நாட்களுக்கு முன்பு அவரால் பிடிக்கப்பட்ட நாகபாம்பு ஒன்று, நடனமாடச் சென்றபோது, ​​திடீரென பெட்டியிலிருந்து வெளியேறி ராஜ்குமாரின் மார்பில் கடித்தது.

பின்னர், புத்தல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

யாழில் கணவனை கொன்ற மனைவிக்கு மரணதண்டனை

யாழ்ப்பாணம் - அரியாலை, பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன்...

வல்வெட்டித்துறையில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தலைவரின் பிறந்தநாள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்...

4வது மாடியில் சுரேஷ் சாலேயின் காற்சட்டை கழற்றப்பட்டதா?: அந்த ‘அருவருப்பான’ சம்பவம் எது?

முன்னாள் எஸ்.ஐ.எஸ். இயக்குனர் சுரேஷ் சாலே சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார் என்பதை மனநல...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்