சீனாவில் 10 ஆண்டுகளாக ஹோமா நிலையிலிருந்த ஒருவர் சுயநினைவுக்கு திரும்பியுள்ளார். அவருடைய மனைவி இத்தனை ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பராமரித்து, கணவரை மீட்டுள்ளார்.
சீனாவின் அன்ஹுய் மாகாணத்தைச் சேர்ந்த சன் ஹாங்சியா என்ற பெண், 2014 இல் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு அரை சுயநினைவுக்குச் சென்ற பிறகு தனது கணவரைக் கைவிட மறுத்துவிட்டார்.
10 ஆண்டுகாலமாக மனைவி தனது கணவனை அன்பாகவும், அக்கறையாகவும் பராமரித்த காதல் கதை ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
“நான் மிகவும் சோர்வாக இருந்தாலும், குடும்பம் மீண்டும் ஒன்றிணைந்ததால் அனைத்தும் பயனுள்ளது என்று நான் உணர்கிறேன்,” என்று சன் கூறினார்.
கணவனுக்கு மாரடைப்பு ஏற்பட்ட தருணத்தை மனைவி நினைவு கூர்ந்தார்.
தனது கணவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, ஹோமா நிலையில் சென்றபோது தான் அனுபவித்த அதிர்ச்சியையும் வேதனையையும் நினைவு கூர்ந்தார்.
தனது இரண்டு குழந்தைகளும் தன்னை வலுவாக இருக்கவும், மனம் தளராமல் இருக்கவும் தூண்டியதாக அந்தப் பெண் கூறினார். “நான் அவர்களுக்கு ஒரு நல்ல முன்மாதிரி வைக்க விரும்புகிறேன்,” சன் கூறினார்.
கடந்த தசாப்தத்தில் தனது எண்ணங்கள் ஒவ்வொரு நாளும் கணவனை மையமாகக் கொண்டிருந்ததாக மனைவி கூறினார். சன்னின் நேரமும் சக்தியும் கணவனது மயக்க நிலையில் அவரை வசதியாக வைத்துக் கொள்ளச் செலவிடப்பட்டது.
கோமாவின் நீண்ட கால நிலை உடல்ரீதியான பிரச்சனைகளுக்கு வழிவகுத்தது, மேலும் அவருக்கு சுவாசிக்க உதவும் கருவி, சிறுநீர் வடிகுழாய் தேவைப்பட்டது.
“அவர் கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக திறந்தன,” என்று மனைவி சொன்னார்.
அந்த நபரின் 84 வயதான தந்தை, தனது மருமகள்் செய்த தியாகங்களுக்கு நன்றி தெரிவித்தார்.
“அவள் என் மருமகள், ஆனால் உண்மையில் அவள் ஒரு மகளை விட சிறந்தவள். அவருடன் யாரையும் ஒப்பிட முடியாது,” என்றார்.