அம்பாறை, திருக்கோவிலைச் சேர்ந்த பாம்பாட்டி ஒருவர் புத்தல நகரில் இடம்பெற்ற வீதி நிகழ்ச்சியின் போது தனது வளர்ப்பு நாகப்பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார்.
48 வயதான ராஜ் குமார், நன்கு அறியப்பட்ட பாம்பாட்டியாவார். பல பகுதிகளில் தெரு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இவர் 6 பிள்ளைகளின் தந்தையாவார்.
இவர் கடந்த மே 1ஆம் திகதி புத்தல நகரில் உள்ள பேருந்து நிலையம் அருகே பாம்பு நடனம் ஆடிக்கொண்டிருந்தார். அப்போது இரண்டு நாட்களுக்கு முன்பு அவரால் பிடிக்கப்பட்ட நாகபாம்பு ஒன்று, நடனமாடச் சென்றபோது, திடீரென பெட்டியிலிருந்து வெளியேறி ராஜ்குமாரின் மார்பில் கடித்தது.
பின்னர், புத்தல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.




