யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்களுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதமாக ரிக்ரொக் வீடியோ வெளியிட்ட மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளரிடம் பொலிசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
அம்பாறை, மகாஓயாவிலுள்ள வைத்தியசாலையில் மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளராக பணியாற்றும் கொக்குவிலை சேர்ந்த ஒருவர் வெளியிட்ட ரிக்ரொக் வீடியோ சர்ச்சையானது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தாதிய உத்தியேகத்தர்கள் தொடர்பில் இந்த வீடியோ பதிவாகியிருந்தது.
2023 ஜனவரி 2ஆம் திகதி குறிப்பிட்ட நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது இந்த வீடியோவை பதிவு செய்திருந்தார். ஒரு வருடத்திற்கும் மேலான காலத்தின் பின்னர் அதை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியிருந்தார்.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பொலிஸ் முறைப்பாடு செய்ததுடன், சுகதார திணைக்கள ரீதியான விசாரணையையும் கோரியிருந்தார்.
இதனடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிசார், அந்த நபரை அழைத்து நேற்று வாக்குமூலம் பதிவு செய்தனர்.
மக்களுக்கு விழிப்புணர்வூட்ட அந்த வீடியோவை வெளியிட்டதாக அவர் குறிப்பிட்டதாக அறிய முடிந்தது.
எனினும், மிக காலதாமதமாக இந்த வீடியோவை வெளியிட்டதற்கு காரணம், ரிக்ரொக்கில் பிரபலமாகும் குறுக்கு வழி உத்தி காரணமா என்றும் பொலிசார் ஆராய்ந்து வருகிறார்கள்.




