வவுனியா, நெடுங்கேணி பகுதியில் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கணவனின் சடலத்தை பார்த்ததும், மனைவியும் நஞ்சருந்தி உயிர்மாய்த்துள்ளார்.
நெடுங்கேணி, கீரிசுட்டான் பகுதியில் இன்று (2) மாலை இந்த சம்பவம் நடந்தது.
கீரிசுட்டான் பகுதியில் அரைக்கும் ஆலையொன்றை நடத்தி வந்த ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அரைக்கும் ஆலைக்கு அண்மையிலுள்ள அவர்களின் வீடொன்றில் அவரது சடலம் காணப்பட்டுள்ளது.
இன்று மதியம், தகவலறிந்து அங்கு சென்ற மனைவி சடலத்தை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக வீட்டுக்கு சென்ற அவர் நஞ்சருந்தியுள்ளார். அவர் வைத்தியசலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், வழியில் உயிரிழந்தார்.
வேதாரணியம் லோகநாதன் (45), லோகநாதன் பரமேஸ்வரி (37) ஆகியோரே உயிரிழந்தனர். அவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.
லோகநாதனின் சடலம் காணப்பட்ட வீட்டின் மலசலகுழியையும் உடைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சடலத்தை மறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தற்போது, சம்பவ இடத்தில் நீதவான் விசாரணை நடந்து வருகிறது.