வாலிபர் ஒருவர் தன்னுடன் கள்ளத்தொடர்பில் இருந்த மாமியாரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் இணையத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.
பீகாரில் பங்கா மாவட்டம் ஹீர்மோதி காவுன் அருகே சத்ராபால் கிராமத்தை சேர்ந்தவர் சிக்கந்தர். அதே கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுடன் இவருக்கு திருமணமானநிலையில் பெண்வீட்டில் வசித்து வந்தார். அப்போது சிக்கந்தரின் மனைவி இறந்தநிலையிலும் அவர் அங்கேயே இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் 54 வயதான தன் மாமியாருடன் சிக்கந்தர் நெருங்கி பழகிவந்தநிலையில் இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் இருவருடைய நடத்தையிலும் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து சிக்கந்தரின் மாமனார் உள்பட உறவினர்கள் அனைவரும் அவர்களை விசாரித்துள்ளனர். அதில் மாமியாருடன் அந்த வாலிபருக்கு தொடர்பு இருப்பது அம்பலமானது.
बिहार, में सास-दामाद ने गांव वालों के सामने रचाई शादी, दामाद और सास का कई सालों से चल रहा था अफेयर, अब यही देखना रह गया था #AbkiBaar400Paar #Election2024 #GTvsRCB #TakeItLightly #viralvideo #LokSabhaPolls #TejRanFam #INFOSYS pic.twitter.com/YGKl7P8pQj
— Priya halchal (@HalchalPriya) April 28, 2024
இதனால் அங்கு பஞ்சாயத்து கூட்டப்பட்டு கிராம மக்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த செய்தி இணையத்தில் வெளியாகி காட்டுத்தீ போல பரவ தொடங்கியுள்ளது.