25.7 C
Jaffna
January 10, 2025
Pagetamil
இலங்கை

அமெரிக்க ஆய்வுக் கப்பலுக்கு இலங்கைக்குள் நுழைய அனுமதி மறுப்பு!

அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் குழுவை ஏற்றிய ஆய்வுக் கப்பலை இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்க அனுமதிப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கைக் கடற்பரப்பிற்குள் எந்தவொரு ஆய்வுக் கப்பலும் பிரவேசிக்க அனுமதிக்கக் கூடாது என அரசாங்கம் எடுத்த கொள்கைத் தீர்மானத்திற்கு அமைய மேற்கண்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

எரிபொருள், நீர் சுத்திகரிப்பு, உணவு மற்றும் இதர வசதிகளை பெறுவதற்காக அமெரிக்க ஆய்வுக் கப்பல் இலங்கைக்குள் நுழைய அனுமதி கோரியதால், அந்த கப்பல் இலங்கை கடல் எல்லையை பயன்படுத்தாமல், சர்வதேச கடல் எல்லைக்கு சென்று அதற்கான வசதிகளை ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

சம்பந்தப்பட்ட அமெரிக்க கப்பல் சென்னை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி கோரியதாகவும், அங்கும் அனுமதி வழங்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

சீன ஆய்வுக் கப்பல் ஒன்று நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான கோரிக்கை முன்னதாக நிராகரிக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகத் தமிழாராய்ச்சி படுகொலை நினைவு

Pagetamil

நுண் நிதிக்கடன் தொடர்பில் விரைவில் திருத்தம்

east tamil

உதயங்க வீரதுங்கவிற்கு விளக்கமறியல்

Pagetamil

உலகத்தமிழாராய்ச்சி படுகொலை நினைவு

east tamil

90 வகையான மருந்துகளின் விலைகளை குறைக்கத் தீர்மானம்

east tamil

Leave a Comment