25.7 C
Jaffna
January 11, 2025
Pagetamil
இலங்கை

வவுனியா வைத்தியசாலையில் கர்ப்பிணி தாயும், சிசுவும் பலி

வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்பிணித்தாய் குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதுடன் அவரது,வயிற்றில் இருந்த சிசுவும் மரணமடைந்துள்ளது.

மதவாச்சி பகுதியை சேர்ந்த நிறைமாத கர்பிணித்தாய் ஒருவர் வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவர் நேற்று (22) விடுதியில் உள்ள குளியலறைக்கு சென்ற நிலையில் தவறி வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அவர் மரணமடைந்துள்ளார்.

இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு அவரது வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்றுவதற்கான சத்திரசிகிச்சையை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளனர். எனினும் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஹெராயின் கடத்தல்: 26 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை

east tamil

உலகத் தமிழாராய்ச்சி படுகொலை நினைவு

Pagetamil

நுண் நிதிக்கடன் தொடர்பில் விரைவில் திருத்தம்

east tamil

உதயங்க வீரதுங்கவிற்கு விளக்கமறியல்

Pagetamil

உலகத்தமிழாராய்ச்சி படுகொலை நினைவு

east tamil

Leave a Comment