இந்திய தேர்தலில் முதன்முறையாக வாக்களித்த இலங்கை அகதிமுகாம் பெண்!

Date:

திருச்சி கொட்டப்பட்டில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர் நளினி(38). இவரது பெற்றோர் மண்டபம் முகாமில் வசித்தபோது, 1985இல் நளினி பிறந்துள்ளார். தற்போது தனது கணவருடன் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருகிறார்.

நளினி இந்தியாவில் பிறந்திருந்தாலும், பெற்றோர் இலங்கைத் தமிழர்கள் என்பதால் அவருக்கு பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை போன்றவை வழங்கப்படவில்லை.

இந்நிலையில், மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நளினி, இந்திய குடியுரிமை சட்டப்படி பாஸ்போர்ட் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை நீதிமன்ற உத்தரவுப்படி பெற்றார்.

இதையடுத்து, திருச்சி விமானநிலையம் வயலர்லெஸ் சாலையில் உள்ள எம்.எம் தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நளினி நேற்று முதன்முறையாக வாக்களித்தார்.

spot_imgspot_img

More like this
Related

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...

LAUGFS எரிவாயு விலையும் குறைந்தது!

LAUGFS எரிவாயு நிறுவனம், இன்று நள்ளிரவு முதல் வீட்டு உபயோக எரிவாயு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்