விளையாட்டு

மகளிர் கிரிக்கெட்டில் 300+ ஓட்டங்களை விரட்டியடித்த முதல் அணியானது இலங்கை!

மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய இலக்கை சேஸ் செய்த சாதனையுடன், தென்னாபிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி, தொடரையும் கைப்பற்றியுள்ளது இலங்கை அணி. மகளிர் கிரிக்கெட்டில் 300 இற்கும் அதிக ஓட்டங்களை சேஸ் செய்த முதல் அணியானது இலங்கை.

நேற்று (17) தென்னாபிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூமில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்று 2-1 என தொடரை கைப்பற்றியுள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க மகளிர் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 301 ஓட்டங்களை எடுத்தது.

அந்த அணி சார்பில் லோரா வோல்வர்ட் ஆட்டமிழக்காமல் 184 ஓட்டங்களை பெற்றிருந்தார். கடந்த போட்டியிலும் அவர் சதமடித்திருந்தார்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 44.3 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 305 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.

ஒருநாள் போட்டியில் மகளிர் அணியொன்று அதிக ஓட்டத்தை எட்டிப்பிடித்த சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னர், அஸ்திரேலிய மகளிர் அணி 2012 இல் நியூசிலாந்துக்கு எதிராக 289 ஓட்டங்களை விரட்டியடித்ததே சாதனையாக இருந்தது.

இலங்கை அணி சார்பில் சமரி அத்தபத்து ஆட்டமிழக்காமல் 5 சிக்ஸர்கள் மற்றும் 26 பவுண்டரிகள் அடங்களாக 195 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இதன்படி, ஒருநாள் போட்டியில் ஒரு பெண் வீராங்கனை பெற்ற மூன்றாவது அதிகபட்ச ஓட்டம் இதுவாகும். ஆண்கள், மகளிர் கிரிக்கெட்டில் இலக்கை விரட்டிய போது, பெறப்பட்ட 2வது அதிகபட்ச ஓட்டமும் இதுதான். முன்னதாக, கடந்த ஆண்டு ICC ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவுஸ்திரேலியாவுக்காக க்ளென் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் பெற்ற 201 ஓட்டங்களே அதிகபட்ச சேஸிங் ஓட்டங்கள்.

போட்டியின் ஆட்டநாயகி விருதை சமரி அத்தபத்து பெற்றார். தொடர் நாயகி தென்னாபிரிக்காவின் லோரா வோல்வர்ட்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த ஆண்டர்சன்

Pagetamil

பிஎஸ்ஜி அணியில் இருந்து வெளியேறுவதாக எம்பாப்பே அறிவிப்பு!

Pagetamil

“நீங்கள் செங்கோட்டையில் கொடி ஏற்றவில்லை சஞ்சீவ் கோயங்கா!” – ஷமி ஆவேசம்

Pagetamil

சென்னையை வீழ்த்தியது குஜராத்

Pagetamil

சாய் சுதர்சன், கில் சதம்: சிஎஸ்கேவுக்கு 232 ரன்கள் இலக்கு

Pagetamil

Leave a Comment