25.6 C
Jaffna
January 11, 2025
Pagetamil
இந்தியா

சல்மான் கானுடன் தனிப்பட்ட விரோதம் கிடையாது… ஆனாலும் லாரன்ஸ் பிஷ்னோய் கொல்ல துடிக்கும் பின்னணி!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்த காரணமான லாரன்ஸ் பிஷ்னோய் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது கடந்த சில நாள்களுக்கு முன்பு அதிகாலை நேரத்தில் பாதுகாப்பு குறைந்திருந்த நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய பிறகு டெல்லி சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பின்ஷோய் இத்துப்பாக்கிச்சூட்டுக்கு நாங்கள்தான் காரணம் என்று பேஸ்புக்கில் வெளிப்படையாக அறிவித்ததோடு இது டிரைலர் தான் என்றும், இறுதி எச்சரிக்கை என்றும் குறிப்பிட்டு இருந்தான்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இத்துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு காரணமான லாரன்ஸ் பிஷ்னோய் இதற்கு முன்பு பஞ்சாப் பாடகர் சிது மூஸ்வாலா படுகொலையிலும் தொடர்பு கொண்டுள்ளான். இது போன்று எண்ணற்ற படுகொலைகளை செய்துள்ள லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் இருந்து கொண்டே தனது வேலையை கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறான் என நீண்ட காலமாக குற்றம்சாட்டப்படுகிறது.

அவனது மற்றொரு கூட்டாளி கோல்டி பிரர் அமெரிக்கா மற்றும் கனடாவில் பதுங்கி இருக்கிறான். இருவரும் சேர்ந்துதான் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்துகின்றனர்.

லாரன்ஸ் பிஷ்னோயிக்கும் சல்மான் கானுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த வித விரோதமும் கிடையாது. 1998-ம் ஆண்டு சல்மான் கான் ராஜஸ்தானில் ஹம் சாத் சாத் ஹை படப்பிடிப்புக்கு சென்ற போது அபூர்வ வகை மான்களை வேட்டையாடியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வந்தது. அந்த வழக்குகளில் ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு அதில் இருந்து வெளியில் வந்த பிறகும், மான் வேட்டை விவகாரம் சல்மான் கானை விடவில்லை. சல்மான் கான் வேட்டையாடிய மான்களை பிஷ்னோய் சமுதாய மக்கள் தெய்வமாக கருகின்றனர். இதனால் சல்மான் கான் மான் வேட்டையாடியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கோரிக்கை விடுத்திருந்தான்.

மன்னிப்பு கேட்கவில்லையெனில் சல்மான் கானை ஜெய்ப்பூரில் கொலை செய்வோம் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கடந்த 2018-ம் ஆண்டு கோர்ட்டிற்கு வெளியில் மிரட்டல் விடுத்தான். அதன் பிறகு இது தொடர்பாக தனது கூட்டாளிகள் துணையோடு அடிக்கடி சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்துக்கொண்டே இருக்கிறான். 2022-ம் ஆண்டு சல்மான் கானின் தந்தை வழக்கமாக நடைபயிற்சிக்கு செல்லும் இடத்தில் லாரன்ஸ் தனது கூட்டாளி மூலம் கொலை மிரட்டல் கடிதம் கொடுத்துவிட்டு சென்றான். கடந்த ஆண்டில் 4 முறை சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்துள்ளான். சல்மான் கான் மீது இந்த அளவுக்கு கோபமாக இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் இருந்தாலும் தனது வேலைகளை மட்டும் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறான்.

பஞ்சாப் பாடகர்கள், சாராய வியாபாரிகள், போதைப்பொருள் கடத்துபவர்கள் மற்றும் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்தல், கொலை போன்ற காரியங்களில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறான். அதோடு ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா என வடமாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனது கூட்டத்தை இயக்க தனித்தனி ஆட்களை நியமித்து இருக்கிறான். அவன் அதிக நாள்கள் சிறையில் இருப்பதால் சிறையில் ஆயுத வியாபாரிகள் மற்றும் கைதிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு அவர்களை தனது கூட்டத்தில் சேர்த்துக்கொள்கிறான். கைதிகள் சிறையில் இருந்து வெளியில் வந்த பிறகு லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தில் சேர்ந்து அவனுக்காக வேலை செய்கின்றனர். அவர்களுக்கு தேவையான பணம் மற்றும் ஆயுத உதவிகளை கனடாவில் இருந்து கொண்டு லாரன்ஸ் கூட்டாளி கோல்டி பிரர் செய்து கொடுக்கிறான்.

1993ம் ஆண்டு பிறந்த பிஷ்னோய் 2011ம் ஆண்டு பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் படித்த போது கோல்டி பிரரை சந்தித்து அறிமுகமாகிக்கொண்டு நண்பர்களானார்கள். லாரன்ஸ் பிஷ்னோய் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. தற்போது அவனது கூட்டத்தில் 700க்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் குறிபார்த்து சுடத்தெரியும். அதோடு லாரன்ஸ் மற்றும் கோல்டி பிரர் ஆகியோருக்கு காலிஸ்தான் அனுதாபிகளுடனும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி தெரிவித்துள்ளது. இதனால் சல்மான் கான் தொடர்ந்து உச்சக்கட்ட பாதுகாப்பில் வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விடுதலைக்காக சொத்தை விற்றவர் வஉசி; சொத்துக்காக திருமணம் செய்தவர் பெரியார் – சீமான் ஆவேசம்

Pagetamil

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் குழுவின் தலைவன் கைது!

Pagetamil

திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அசத்தல் சாதனை

east tamil

போதைப் பொருள் கடத்தல் வழக்கு: நடிகர் மன்சூர் அலிகான் மகனுக்கு நிபந்தனை ஜாமீன்

Pagetamil

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் நோட்டீஸ்

Pagetamil

Leave a Comment