யாழ்ப்பாணம், பிறவுண் வீதியில் எந்தவிதமான பதிவுகளுமின்றி இயங்கி வந்த சர்ச்சைக்குரிய அக்குபஞ்சர் நிலையத்தை உடனடியாக மூடுமாறு, யாழ் மாநகர ஆணையாளர் எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
போலி வைத்திய நிலையம் என வகைப்படுத்தத்தக்க விதமாக, பிறவுண் வீதியில் இயங்கி வந்த இந்த அங்குபஞ்சர் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்ற ஒருவர் கிருமித் தொற்றால் உயிரிழந்திருந்தார்.
எந்தவிதமான மருத்துவரீதியான பதிவும் இல்லாமல் இந்த சிகிச்சை நிலையம் இயங்கியது. அங்கு சிகிச்சையளித்தவரும் எந்தவிதமான அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ தகுதிகளையும் கொண்டிருக்கவில்லை.
அண்மையில் இந்த நிலையத்தை பரிசோதித்த போது, வர்த்தக பதிவுகளும் இல்லாமல் நடத்தப்பட்டு வந்தது தெரிந்தது.
இதனால், அங்குபஞ்சர் நிலையத்தை உடனடியாக மூடுமாறு யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி அறிவித்தல் விடுத்தார். எனினும், அதை பொருட்படுத்தாமல் அங்குபஞ்சர் நிலையம் இயங்கியது.
அத்துடன், தனது நிலையத்தை யாராலும் மூட முடியாதாது என்ற சாரப்பட வீடியோ வெளியிட்டு சவாலும் விடுத்திருந்தார், அந்த நிலையத்தை நடத்தியவர்,
இந்த நிலையில், சிகிச்சை நிலையத்தை உடனடியாக மூடுமாறு யாழ் மாநாகர ஆணையாளர் எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.




