19 வயதுக்குட்பட்ட பெண்கள் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் ஆடிவரும் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள 14 வயதான சாமுதி பிரபோத பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளார். அந்த தொடரில் அவுஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகள் ஆடி வருகின்றன.
அணியில் இப்பொழுது ‘பட்டி’ என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த சாமுதி பிரபோத மொனராகலை மாவட்டத்தில் உள்ள கும்புக்கன கிராமத்தில் வசித்து வருகிறார். அவர் தற்போது இலங்கை 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவள் ஒரு இடது கை சுழற்பந்து வீச்சாளர்.
14 வயதில் தேசிய கனிஸ்ட மகளிர் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியவர் என்பதால் சாமுதி பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.
அது மாத்திரமன்றி மொனராகலை போன்ற கடினமான பிரதேசத்தில் இருந்து தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்துவது மற்றுமொரு சிறப்பு.
அவரது பகுதி தேசிய அளவில் ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு கூட ஒரு வீரரை உருவாக்கவில்லை.
ஆனால் இம்முறை 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான வீராங்கனைகள் இது போன்ற தொலைதூர பகுதிகளில் இருந்து வந்துள்ளனர்.