12 வயது சிறுமியை திருமணம் செய்த 63 வயது மத போதகர்!

Date:

63 வயது மத போதகருக்கும், 12 வயது சிறுமிக்கும் இடையே நடந்த திருமணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 30, சனிக்கிழமையன்று, கானாவின் நுங்குவாவில், கொபோர்பு வுலோமோ என்ற மதபோதகர், நா ஒக்ரோமோ என்று அழைக்கப்படும் சிறுமியை திருமணம் செய்துள்ளார்.

மத போதகர் ஒரு கன்னிப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நீண்டகால வழக்கத்தின் காரணமாக திருமணம் நடந்ததாக, திருமணத்தில் சாட்சியாக கலந்து கொண்ட ஒருவர் கூறினார். நுங்குவாவில் தற்போது ஒன்பது வயதுக்கு மேற்பட்ட கன்னிப் பெண்கள் இல்லை என்று அவர் வெளிப்படுத்தினார்.

மத போதகர் அந்த சிறுமியை ஆறு வயதாக இருந்தபோது தேர்ந்தெடுத்தார். தற்போது திருமணம் நடந்துள்ளது.

கிரேட்டர் அக்ரா பகுதியில் உள்ள நுங்குவாவில் உள்ள க்போர்பு வுலோமோ ஆலயம் திருமணத்தை ஆதரித்தது: “மணமகள் இன்னும் பாடசாலையில் படிக்கிறார். அவர் கொபோர்பு வுலோமோவுடன் வாழவில்லை. மற்ற ஆண்கள் அவரை தொந்தரவு செய்யாமல் இருப்பதற்காக,  பாரம்பரிய திருமணத்தைத் தொடங்கினோம். அவர் முதிர்ச்சியடைந்ததும், நாங்கள் எங்கள் இறுதி திருமண சடங்குகளை செய்வோம்“ என்றது.

கானாவில் உள்ள ஸ்டார் எஃப்எம், “எந்தவொரு ஆணும் அவரை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்யாததை உறுதிசெய்ய” விழா அவசியம் என்று கூறப்படுகிறது என்றது.

கோவிலின் செய்தித் தொடர்பாளர்திருமணத்தின் வரலாற்று மற்றும் ஆன்மீக பொருத்தத்தை விளக்கினார்.

“மணமகள் 300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மறுபிறவி பெற்ற பெண், பல ஆண்டுகளாக செய்யப்படாத தெய்வங்களில் ஒன்றின் புனித சடங்குகளைச் செய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக திரும்பி வந்துள்ளார்” என்று அவர்கள் கூறினர்.

பாதிரியார் சிறுமிடன் உடலுறவு கொள்ள அவர் முதிர்ச்சியடையும் வரை அல்லது சட்டப்பூர்வ திருமணம் மற்றும் பிரசவ வயதை அடையும் வரை காத்திருக்க வேண்டும்” என்று ஸ்டார் எஃப்எம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

போர் இழப்பீட்டை பெற்ற பின்னரே ஹோர்முஸ் திறக்கப்படும்: ஈரான் அழுங்குப்பிடி!

ஈரானிய ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல் தொடர்புப் பிரிவு துணை அதிகாரியான சையத்...

லாஃப்ஸ் எரிவாயு விலையும் உயர்ந்தது!

இன்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லாஃப்ஸ் சமையல் எரிவாயு...

லிட்ரோ எரிவாயு விலைகள் எகிறின!

தொடர்ந்து நடைபெற்று வரும் சர்வதேச மோதல் காரணமாக அதிகரித்து வரும் உலகளாவிய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்