24.9 C
Jaffna
January 27, 2025
Pagetamil
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேகத்தில் கைதான 3 பேரிடம் மன்னிப்பு கோரிய பொலிசார்!

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஹொரவப்பொத்தான பிரதேசத்தைச் சேர்ந்த மூவரிடம், ஹொரவப்பொத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று (01) உயர் நீதிமன்றில் மன்னிப்புக் கோரினர்.

6 மாதங்களுக்கும் மேலாக சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதன் மூலம் தங்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து, செனுல் அப்தீன் இர்பான், செனுல் அப்தீன் கலிபத்துல்லா மற்றும் நூர்கே ஜகாரியா ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், சம்பவம் தொடர்பில் உரியவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்த மாட்டோம் என நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த மனுக்கள் துரைராஜா, குமுதுனி விக்ரமசிங்கே மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இந்த மனுக்களின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்த அப்போதைய ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரொஷான் சஞ்சீவ, பொலிஸ் சார்ஜன்ட் பிரேமரத்ன, சார்ஜன்ட் சிசிர, பொலிஸ் கான்ஸ்டபிள் ஜயதிலக மற்றும் ஹெபிட்டிகொல்லாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் திறந்த நீதிமன்றில் ஆஜராகி மன்னிப்பு கோரினர்.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன், இந்த மனுதாரர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஹொரவப்பொத்தான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அந்த வழக்குகளில் இருந்து 2022ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னர் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின்படி, மனுதாரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களின் கணக்கில் நூறு கோடி ரூபாய்க்கு மேல் பணம் கைமாறியுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எவ்வாறாயினும், அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் தம்மை விடுவிப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை சுட்டிக்காட்டிய மனுதாரர்கள், தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்குமாறு கோரி இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாணவர்கள் மீது இரும்புக்கர நடவடிக்கை தேவை: விடாப்பிடியாக நிற்கும் யாழ் பல்கலை ஆசிரியர்கள்!

Pagetamil

காரில் மதுபோதையில் வந்திறங்கிய மாணவி – ஆசிரியர் கைது

east tamil

மீனவ பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி – ரவிகரன்

east tamil

மஹிந்தவின் உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் – கோரிக்கை

east tamil

பெப்ரவரி 4 கரிநாளாக பிரகடனப்படுத்த அழைப்பு!

Pagetamil

Leave a Comment