யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவில் இன்று (31) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 30 இற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்னாலை பிரதேசத்தில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள யுக்திய நடவடிக்கையின் அங்கமாக, நூற்றுக்கும் மேற்பட்ட பொலிசார், விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இதன்போது, பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள், வாள்வெட்டு, கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புபட்ட 30 இற்கும் மேற்பட்ட ஆண், பெண்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1