கடுவெல, கொரத்தோட்டை, பட்டியவத்த வீதியிலுள்ள வீடொன்றில் பெண் ஒருவரை படுகொலை செய்த சந்தேகத்தின் பேரில் பெண்ணின் மருமகன் மற்றும் மற்றுமொரு நபரை கடுவெல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த மருமகன் கொலையுண்ட பெண்ணின் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர். அவருக்கு 38 வயது இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
இவருடன் கைது செய்யப்பட்டுள்ள மற்றைய நபர் சந்தேகநபரின் வீட்டில் பழுதுபார்க்க வந்தவர். கொத்தலாவல, கடுவெல பட்டியாவத்தை வீதியில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாயான அஜந்தா கடுகம்பலா (52) கடந்த புதன்கிழமை காலை தனது வீட்டில் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதோடு அவர் அணிந்திருந்த சில தங்க ஆபரணங்களும் காணாமல் போயிருந்தன.
சந்தேகநபர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் உயிரிழந்த பெண்ணின் கைத்தொலைபேசியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.