முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் வைத்தியர்
அகிலேந்திரன் இன்று(27) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் மரணமடைந்துள்ளார்.
புளியங்குளம் பகுதியில் அவர் பயணம் செய்த வாகனம் ரிப்பருடன் மோதுண்டு
விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்தவரை வவுனியா வைத்தியசாலைக்கு விரைந்து
கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட போதும் சிகிச்சை
பலனின்றி காலமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மருத்துவ நிர்வாக முதுமாணிப் பட்டதாரியான இவர் வவுனியா வைத்தியசாலை
மற்றும் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலை ஆகியவற்றின் முன்னாள்
பணிப்பாளரும் ஆவார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1