டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கைது

Date:

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

டெல்லி யூனியன் பிரதேசத்தில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரூ.2,800 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத் துறைவழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்குதொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை முதல்வர் கேஜ்ரிவாலுக்கு 9 முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை.

இந்த சம்மன்களை எதிர்த்து கேஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சுரேஷ் குமார் கெய்த், மனோஜ் ஜெயின் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

கேஜ்ரிவால் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார். அவர் கூறும்போது, “மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் முதல்வர் கேஜ்ரிவாலை கைது செய்ய அமலாக்கத் துறை முயற்சி செய்கிறது. இதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்றார்.

அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, “கேஜ்ரிவால் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுக்கிறார். பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளன” என்று தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேஜ்ரிவால் தரப்பில் கோரப்படுகிறது. இப்போதைய நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 22-ம் தேதி நடைபெறும்” என்று தெரிவித்தனர்.

கைது நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள கேஜ்ரிவாலின் வீட்டுக்கு சென்று சோதனை நடத்தினர். அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இரவு 9.20 மணி அளவில் அவர் கைது செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்துகின்றனர்.

“முதல்வர் கேஜ்ரிவால் ராஜினாமா செய்ய மாட்டார். சிறையில் இருந்து அரசை வழிநடத்துவார்” என்று டெல்லி அமைச்சர் அதிஷி தெரிவித்தார். இதற்கிடையே, கேஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

மஹிந்தவின் சகாவிற்கு வரும் விசித்திர நோய்: நீதிமன்றில் நடந்த சுவாரஸ்யம்!

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லகமவின் பிணை மனுவை நேற்று (13) நிராகரித்த...

அம்மாவும் அப்பாவும் படுக்கையில்: பிணை கோரும் நாமல்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் (Airbus) ஒப்பந்தம் தொடர்பில் ரூ. 100 மில்லியன் இலஞ்சம்...

மஹிந்த மகன் வழக்கில் நேற்று நீதிமன்றில் நடந்தவை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்