உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் அதை வெளிப்படுத்த தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.




