ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளராக அருளானந்தம் அருண் (அருண் சித்தார்த்) நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வின் போதே ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனை அறிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பிரதான அமைப்பாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செயற்பட்டு வருகிறார். இன்றைய கூட்டத்தில் இதுவரை காலமும் கட்சியின் ஆதரவாளர்களாக உறுப்பினர்களாக இருந்த பலரும் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இராணுவ புலனாய்வுத்துறை செயற்பாட்டாளராக அருண் சித்தார்த் செயற்படுவதாக முன்னர் பலத்த விமர்சனங்கள் எழுந்திருந்தன.




