பூநகரி பிரதேசசபை தனது ஆளுகைக்குட்பட்ட மிகவும் பின்தங்கிய வேரவில் கிராமத்தில் மூன்றாவது கணணி மையம் மற்றும் பொது நூலகத்தை வெற்றிகரமாக திறந்து வைத்துள்ளது.
சுமார் 50வருடங்களின் பின்னராக நூலகமொன்றையும் கணணி வசதிகளையும் வேரவில் கிராமம் கண்டிருப்பதாக மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
வேரவில் மற்றும் அதனையண்டிய வலைப்பாடு,கிராஞ்சி,பொன்னாவெளி மற்றும் பாலாவி என ஜந்து கிராமங்களை மையப்படுத்தி பொது நூலகம் மற்றும் கணணி கூடம் இன்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகள் அதிகாரிகள் என எவருமற்ற எளிமையான திறப்புவிழா நிகழ்வில் மாணவர்கள்,மதத்தலைவர்கள் மற்றும் பொது அமைப்புக்களினை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
முன்னதாக வாடியடி மற்றும் ஜெயபுரத்தில் இரு கணணி மயப்படுத்தப்பட்ட நூலகங்கள் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மூன்றாவதாக வேரவில் பொது நூலகம் திறக்கப்பட்டுள்ளது.
தமது உயர்தர வகுப்பு கல்விக்காக முழங்காவில்,கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம்,வவுனியாவென அலைந்து திரிந்த ஜந்து கிராம மக்களும் தமது சொந்த மண்ணிலேயே கல்வியை தொடர வழிவகுத்திருப்பதாக கல்விச்சமூகம் பாராட்டு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் மன்னார் யாழ்ப்பாணம் வீதியில் பல்லவராயன்கட்டு சந்தியிலிருந்து மேற்காக இக்கிராமங்கள் அமைந்துள்ளன.
இக்கிராமங்களில் குவிந்திருக்கின்ற சுண்ணக்கல்லை அகழவும் சீமெந்து தொழிற்சாலையொன்றை அமைக்கவும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்ற போதும் மக்கள் எதிர்ப்பினை தெரிவித்து தொடர்ந்து போராவருவது குறிப்பிடத்தக்கது.
அரசியல்வாதிகள் அதிகாரிகள் என எவருமற்ற எளிமையான திறப்புவிழா நிகழ்வில் மாணவர்கள், மதத்தலைவர்கள் மற்றும் பொது அமைப்புக்களினை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
முன்னதாக வாடியடி மற்றும் ஜெயபுரத்தில் இரு கணணி மயப்படுத்தப்பட்ட நூலகங்கள் திறந்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மூன்றாவதாக வேரவில் பொது நூலகம் திறக்கப்பட்டுள்ளது.
தமது உயர்தர வகுப்பு கல்விக்காக முழங்காவில், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம், வவுனியாவென அலைந்து திரிந்த ஜந்து கிராம மக்களும் தமது சொந்த மண்ணிலேயே கல்வியை தொடர வழிவகுத்திருப்பதாக கல்விச்சமூகம் பாராட்டு தெரிவித்துள்ளது.