முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி அவருக்கு எதிராக சட்டத்தரணியினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை புதிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
நீதிபதி லஃபர் தாஹிருடன் மனுவை விசாரித்து வரும் நீதிபதி கேமா ஸ்வர்ணாதிபதி, அவர் விரைவில் ஓய்வு பெறப் போவதாக தெரிவித்ததுன், இந்த காரணத்திற்காக புதிய குழாம அல்லது தனககு பதிலாக மற்றொரு நீதிபதியை நியமிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை பிரதிவாதியாக நியமித்து நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் சட்டத்தரணி திமித்ரி ஷிராஸ் அகஸ்டஸ் பித்ராஞ்சலி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
நேற்றைய தினம் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் மீள் மனுவொன்றை தனது கட்சிக்காரர் தாக்கல் செய்துள்ளதாக மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சாந்தக ஜயசுந்தர நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் ஜி.எல் உட்பட ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் சட்டத்தரணி எம்.கே.அசோக்பரன் ஆஜராகியிருந்தார். இந்த மனுவில் குறுக்கிட்ட மனுதாரர்களான பீரிஸ் மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர், திருத்தப்பட்ட மனுவின் மூலம் மனுதாரர் தனது வாடிக்கையாளர்களை மனுவின் பிரதிவாதிகளாக பெயரிட்டுள்ளதாக நீதிமன்றில் சுட்டிக்காட்டினர். எனவே, இந்த மனு மீது பூர்வாங்க ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய அவகாசம் கோரியதையடுத்து, நீதிமன்றம் இரண்டு வார கால அவகாசம் வழங்கியது.
பிரதிவாதி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உதித எகலஹேவா ஆஜரானதுடன், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனக் ஈஸ்வரன் ஆஜராகியிருந்தனர்.