கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த புகையிரதத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ரத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரத்கம, ஓவகந்த பிரதேசத்தில் இந்த ஆசிரியை விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புஸ்ஸ, கஞ்சில பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இன்று (20ஆம் திகதி) பிற்பகல் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உயிரிழந்த ஆசிரியை கர்ப்பமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து இதுவரை தெரியவரவில்லை என போலீசார் தெரிவித்தனர்.
உயிரிழந்த ஆசிரியரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1