பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக்குழு (கோப்) அங்கத்துவத்திலிருந்து மேலும் சில எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் விலகியுள்ளனர்.
இன்று, தயாசிறி ஜயசேகர, சரித ஹேரத், எஸ்.எம்.மரிக்கார் ஆகியோர் கோப் குழுவில் இருந்து விலகுவதாக, சபாநாயகருக்கு அறிவித்துள்ளனர்.
முன்னதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்னவும் கோப் குழுவின் அங்கத்துவத்தில் இருந்து இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கோப் குழுவின் தலைமைத்துவத்தை எதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவர் வகிப்பதென்ற அரசியல் பாரம்பரியம் அண்மைய காலத்தில் உருவாகியிருந்த நிலையில், அதை மீறி பொதுஜன பெரமுனவின் ரோஹித அபேகுணவர்த்தன அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார். இது தற்போதைய அரசாங்கத்தின் நிதி முறைகேடுகளை மறைப்பதற்கான முயற்சியென எதிர்க்கட்சிகள் குற்றம்சுமத்தியிருந்தன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1