பாராளுமன்ற பொது அலுவல்கள் குழுவை (கோப் ) பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் மேற்படி குழுவிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொது அலுவல்கள் குழுவின் தலைவராக ரோஹித் அபேகுணவர்தன நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் குழுவிலிருந்து விலக தீர்மானித்துள்ளனர்.
நேற்று (18) ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன
பொது அலுவல் குழுவில் இருந்து விலகுவதற்கான கடிதம் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, இன்று தயாசிறி ஜயசேகர, ஹேஷா விதானகே, இராசபுத்திரன் சாணக்கியன், எஸ்.எம். மரிக்கார், சரித ஹேரத், காமினி வலேபொட ஆகியோரும் கோப் குழுவில் இருந்து விலகியுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1