28 C
Jaffna
February 4, 2025
Pagetamil
இலங்கை

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: இதுவரை 5 பேர் கைது!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வாள்வெட்டில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சித்தங்கேணியைச் சேர்ந்த குறித்த நபர் யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கீரிமலைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடம் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தனது மனைவியுடன் காரைநகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பியவர்களை பொன்னாலை பால பகுதியில் உள்ள கடற்படையின் முகாம் முன்பாக வைத்து வன்முறை கும்பல் கடத்தி சென்றது.

கணவனை ஒரு வாகனத்திலும், மனைவியை ஒரு வாகனத்திலும் கடத்திய வன்முறை கும்பல், மனைவியை சித்தங்கேணி பகுதியில் இறக்கி விட்டு சென்றது. கணவனை கடத்தி சென்றவர்கள் கணவனை கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகாயங்களுடன் வட்டுக்கோட்டை வைத்திய சாலை முன்பாக வீசி சென்றனர்.

படுகாயத்துடன் காணப்பட்டவரை வைத்தியசாலை பணியாளர்கள் மீட்டு யாழ். போதனாவில் அனுமதித்த நிலையில் உயிரிழந்தார்.

இதேவேளை இளைஞன் கடத்தப்படும் போது கடற்படை முகாமில் இருந்த நான்கு கடற்படையினரிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சியிலும் தமிழர்களின் கரிநாள் அனுஷ்டிப்பு

east tamil

இலங்கையின் சுதந்திர தினம் கரிநாளாக அனுஷ்டிப்பு

east tamil

வாக்குச்சீட்டை மாற்ற தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை

east tamil

தியாகி நடராஜன் நினைவு தினம் இன்று

east tamil

77வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து

east tamil

Leave a Comment