இலங்கை வெற்றி

Date:

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்க்ப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பங்களாதேஷ் அணி சார்பில் தவ்ஹித் ஹ்ரிடோய் ஆட்டமிழக்காது 96 ஓட்டங்களையும், சௌம்யா சர்கார் 68 ஓட்டங்களையும், அணித்தலைவர் நஜிமுல் ஹொசைன் சாண்டோ 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுக்களையும் மற்றும் தில்ஷான் மதுஷங்க 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

அதன்படி, 287 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் பத்தும் நிஸ்ஸங்க 114 ஓட்டங்களையும், அசலங்க 91 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் சோரிபுல் இஸ்லாம், தஸ்கின் அஹமட் தலா இரு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இந்த வெற்றியை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளன.

spot_imgspot_img

More like this
Related

வரவு செலவு திட்டத்தின் 2ஆம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, 97...

இலங்கை தமிழ் அரசு கட்சி வரவு செலவு திட்டத்தை எதிர்க்கும்!

இலங்கைத் தமிழ் அரசு கட்சி, 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக...

மட்டக்களப்பில் விபத்துக்குள்ளான வான் ஒன்றை தீ வைத்து எரித்த 4 பேருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை மேல் நீதிமன்றம் தீர்ப்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிலுள்ள வந்தாறுமூலை மாவடிவேம்பு பகுதியில் 2015 ஆண்டு இடம்பெற்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்