2023 உலகக் கோப்பையில் நிகழ்ந்த டைம் அவுட் சம்பவத்தில் இருந்து வெளியேறுமாறு இலங்கை அணிக்கு பங்களாதேஷ் அணித்தலைவர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தெரிவித்துள்ளார்.
இரண்டு அணிகளுக்குமிடையில் சில்ஹெட்டில் நடந்த மூன்றாவது ரி20 போட்டியில் இலங்கையின் வெற்றியின் மூலம், தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, இலங்கை அணி வீரர்கள் அனைவரும் தங்கள் கைக்கடிகாரங்களைச் சுட்டிக்காட்டினர்.
உலகக்கோப்பை தொடரில் நிகழ்ந்த சர்ச்சைக்குரிய டைம் அவுட் சம்பவத்தின் தொடர்ச்சியாக- பங்களாதேஷில் வைத்து அந்த அணியை வெறுப்பேற்றியுள்ளது இலங்பை.
உலகக் கோப்பையின் போது கிரிக்கெட் அறவுணர்வுக்கு பொருந்தாத விதமாக. அஞ்சலோ மத்யூஸை டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்ததாக, பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகிப் அல் ஹசன் முறையீடு செய்தார். நடுவர்கள் தலையிட்ட பிறகும் அவர் தனது முறையீட்டை விலக்க மறுத்து விட்டார். இதனால், சர்வதேச கிரிக்கெட்டில் டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்த முதல் வீரரானார் அங்சலோ மத்யூஸ்.
அந்த போட்டியின் போது, மத்யூஸின் பந்தில் ஷகிப் ஆட்டமிழந்த போது, தனது மணிக்கூட்டை சுட்டிக்காட்டி, டைம் அவுட் பதிலடி கொடுத்தார் மத்யூஸ். போட்டியின் பின்னர் ஷகிப்பை கடுமையாக விமர்சித்தார்.
விடயம் இத்துடன் முடிந்திருக்கும். பொல்லை கொடுத்து அடி வாங்கிய கதையாக, பங்களாதேஷ் இந்த விவகாரத்தை மீள தூசு தட்டி, முகத்தில் கரியை பூசிக் கொண்டுள்ளது.
இரண்டு அணிகளும் ரி20 தொடரில் விளையாடி முடித்துள்ளன. முதலாவது ரி20 போட்டி மார்ச் 3ஆம் திகதி நடந்தது. அந்த போட்டியில் இலங்கையின் முதல் விக்கெட்டாக அவிஷ்க பெர்னாண்டோiவ வீழ்த்தியதும், பங்களாதேஷின் ஷோரிஃபுல் இஸ்லாம் மணிக்கூட்டு சைகையை காண்பித்தார்.
3வது போட்டியின் போது, நுவான் துஷாராவின் பீச் பந்து வீச்சில் பங்களாதேஷ் சின்னாபின்னமாகியிருந்தது. துஷாராவின் பந்துவீச்சில் தோவித் ஹிரிடோய் ஆட்டமிழந்ததும், இலங்கை வீரர் ஒருவர் டைம் அவுட் சைகையை காண்பித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹிரிடோய், இலங்கை வீரரை நோக்கி பாய்ந்தர். அவரை நடுவர் தன்வீர் இஸ்லாம் இழுத்துச் செல்ல வேண்டியிருந்தது.
இது சமீப காலங்களில் பங்களாதேஷ் vs இலங்கை ஆட்டத்தில் ஒரு பயங்கரமான போட்டி உருவாகியதால் இது முற்றிலும் அசாதாரணமானது அல்ல.
போட்டி முடிந்த பின் பங்களாதேஷ் நஜ்முல் ஹொசைன் சாண்டோ, “இது ஆக்ரோஷமான கையாளுதல் அல்லது அது போன்ற எதையும் பற்றியது அல்ல. அவர்கள் டைம் அவுட் சைகையைக் காட்டினார்கள், சரியா? அவர்கள் டைம் அவுட் சம்பவத்திலிருந்து நகரவில்லை.
அவர்கள் அதிலிருந்து வெளியேற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும். நாங்கள் விதிகளின் படியே டைம் அவுட் கேட்டிருந்தோம். அவர்கள் அதைப் பற்றி வெறித்தனத்தில் உள்ளனர். நான் அதைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை.” என்றார்.




