28 C
Jaffna
February 4, 2025
Pagetamil
உலகம்

அமெரிக்க ஜனாதிபதியின் கருத்தை நிராகரித்த நெதன்யாகு

காசாவில் போரில் இஸ்ரேலின் அணுகுமுறை “இஸ்ரேலுக்கு உதவுவதை விட இஸ்ரேலை காயப்படுத்துகிறது” என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தெரிவித்த கருத்தை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை நிராகரித்தார்,

“”பெரும்பான்மையினருக்கு எதிராக நான் தனியார் கொள்கைகளை பின்பற்றுகிறேன் என்கிறார்கள். பெரும்பான்மையான இஸ்ரேலியர்களின் விருப்பம், இது இஸ்ரேலின் நலன்களை புண்படுத்துகிறது என்று அவர் இதன் மூலம் கருதினால், அவர் இரண்டு விஷயங்களிலும் தவறு” என்று நெதன்யாகு கூறினார். .

“காசாவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக இழக்கப்படும் அப்பாவி உயிர்கள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்று பிடன் கூறிய ஒரு நாள் கழித்து,  நெதன்யாகுவின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

ஹமாஸ் உடனான ஐந்து மாத கால யுத்தத்தின் போது இஸ்ரேலை ஆதரித்த பிடன், தற்போது அதிருப்தியடைந்துள்ளது MSNBC க்கு அளித்த பேட்டியில் வெளிப்பட்டுள்ளது.

நெதன்யாகு தெரிவிக்கையில், அவரது கொள்கைகள் “பெரும்பான்மையான இஸ்ரேலியர்களால் ஆதரிக்கப்படுகின்றன,” என்றார். அவர்கள் “ஹமாஸின் மீதமுள்ள பயங்கரவாத பட்டாலியன்களை அழிக்க நாங்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு” ஆதரவளிக்கின்றனர்.

“ஹமாஸை அழித்தவுடன், கடைசியாக செய்ய வேண்டியது காசாவில் வைத்து, பயங்கரவாதத்தை நோக்கி தனது குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் பாலஸ்தீனிய அதிகாரம் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக செயற்படுவதே“ என தெரிவித்தார்.

பாலஸ்தீனிய தேசத்திற்கான அழைப்புகளை நிராகரிப்பதன் மூலம் இஸ்ரேலுக்கு பில்லியன் கணக்கான டொலர்களை இராணுவ உதவி வழங்கும் அமெரிக்காவை நிராகரித்துள்ளார்.

வாஷிங்டனின் வெளிவிவகாரச் செயலர் ஆண்டனி பிளிங்கன், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் பகுதியளவு நிர்வாக அதிகாரத்தைக் கொண்ட பாலஸ்தீனிய அதிகாரத்தை சீர்திருத்தம் செய்வதைப் பற்றிப் பேசினார்.

ஆனால் இஸ்ரேலியர்கள் “பாலஸ்தீன அரசை எங்கள் தொண்டையில் இறக்கும் முயற்சியை நாங்கள் உறுதியாக நிராகரிக்க வேண்டும் என்று கூறும் எனது நிலைப்பாட்டையும் ஆதரிக்கின்றனர்” என்று நெதன்யாகு கூறினார்.

“எனது கொள்கைகள் எனது தனிப்பட்ட கொள்கைகள் என்று கூறும் முயற்சி பெரும்பாலான இஸ்ரேலியர்களால் ஆதரிக்கப்படவில்லை,” என்று நெதன்யாகு கூறினார்.

“பெரும்பான்மையினர் முன் எப்போதும் இல்லாத வகையில் ஒன்றுபட்டுள்ளனர். இஸ்ரேலுக்கு எது நல்லது என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்“ என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“Nudeify AI” தொழில்நுட்பங்களுக்கு தடையுத்தரவு

east tamil

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்

east tamil

சூடானில் 54 பேர் பலி

east tamil

அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து

east tamil

டிக்டொக்கால் இறந்த மகள்

east tamil

Leave a Comment