கனடாவின் ஒட்டாவா நகரில் 6 இலங்கையர்களை கொலை செய்த, 19 வயதான இலங்கை இளைஞன் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த இளைஞன் மனநல சிக்கல்களால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
பெப்ரியோ டி-சொய்சா என்ற 19 வயதான இளைஞன், தான் தங்கியிருந்த வீட்டிலிருந்த ஒரு தாய், அவரது இரண்டரை மாத குழந்தை உட்பட நான்கு பிள்ளைகள் மற்றும் குடும்பத்துடன் பழகிய ஒருவரை கொலை செய்திருந்தார்.
டி-சொய்சா 6 முதல் தர கொலை வழக்குகளையும் ஒரு கொலை முயற்சி வழக்குகளையும் எதிர்கொள்கிறார். நீதிமன்ற ஆவணங்களில் தனுஷ்க விக்கிரமசிங்க என அடையாளம் காணப்பட்ட தந்தை, கடுமையான காயங்களுக்கு ஆளானார், ஆனால் உயிருக்கு ஆபத்தான காயங்கள் இல்லை.
“நான் இன்னும் நடுங்குகிறேன், அந்த குடும்பம் அவருக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது,” என்று அவரது அத்தை அனுஷா டி சொய்சா வெள்ளிக்கிழமை கனடிய ஊடகங்களிடம் தெரிவித்தார். “அவர்கள் ஒரு அற்புதமான குடும்பம்.”
குற்றம் சாட்டப்பட்டவர் தனது சகோதரரின் மூத்த மகன் என்றும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கனடாவுக்கு வந்ததாகவும், தனது மருமகனை “அமைதியான” மற்றும் “நல்ல மாணவர்” என்று விவரித்தார்.
“நான் உறைந்துவிட்டேன், என்னால் தூங்க முடியவில்லை,” என்று அனுஷா டி சொய்சா தெரிவித்தார்.
கொலையாளி இரண்டு வருடங்களுக்கு முன்னர் கனடாவுக்கு வந்த முதல் மாதம் தனது வீட்டில் வசித்ததாக அவர் கூறினார். அதன்பிறகு, அவர் அல்கோன்குயின் கல்லூரியில் சந்தித்ததாக அவர் கூறும் தனுஷ்க விக்கிரமசிங்கவுடன் அறையில் தங்கத் தொடங்கினார்.
அந்த சமயத்தில் விக்கிரமசிங்க தனது குடும்பத்தை இலங்கையில் இருந்து ஒட்டாவாவிற்கு மாற்றுவதற்காக வேலை செய்து வருவதாகவும், குடும்பம் வந்தவுடன் பெர்ரிகன் டிரைவ் ஹவுஸில் தன்னுடன் வாழ டி சொய்சாவை அழைத்ததாகவும் அவர் மேலும் கூறினார்.
விக்கிரமசிங்க குடும்பத்துடன் குடியேறுவதற்கு முன்னர் டி சொய்சா ஒட்டாவாவில் உறவினர்களுடன் தங்கியிருந்ததாக அவர் கூறுகிறார், ஆனால் அவர் சமீபத்தில் தனது உறவினர்களை துண்டித்ததாக கூறுகிறார்.
“அவர் எங்களை தொடர்பு கொள்வதை நிறுத்திவிட்டார். எங்களை ப்ளக் செய்து விட்டார். எங்கள் தொலைபேசி எண்கள், சமூக ஊடகங்கள். எல்லாம் தடுக்கப்பட்டது, ”என அனுஷா டி சொய்சா தெரிவித்தார்.
“இது நடக்கும் என்று என் கனவில் நான் நினைக்கவில்லை.” என்றார்.
ரொறன்ரோவில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் வெள்ளிக்கிழமை Facebook இல் பதிவிட்டுள்ளது, “இலங்கையில் இருந்து கல்விக்காக இடம்பெயரும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் மாற்றத்தின் போது தங்கள் குழந்தைகளின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் மற்றும் வெளிநாடுகளில் புதிய சமூக மற்றும் உளவியல் சூழலில் ஒருங்கிணைக்க வேண்டும். ”
பண்டாரநாயக்க கம வளவ்வே தர்ஷனி டிலந்திகா ஏகநாயக்க (வயது 35), இனுகா விக்கிரமசிங்க (7 வயது), அஸ்வினி விக்ரமசிங்க (4 வயது), ரணயா விக்கிரமசிங்க (2 வயது)
கெல்லி விக்கிரமசிங்க (இரண்டரை மாதங்கள்), காமினி அமரகோன் அமரகோன் முதியன்சேலாகே (வயது 40) ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இதேவேளை, குற்றம் சாட்டப்பட்ட கொலையாளி அங்கு வசிப்பது தனக்குத் தெரியாது என்று வீட்டின் உரிமையாளர் கூறுகிறார்.
“இந்த நபரை [டி சொய்சா] எனக்குத் தெரியாது, ஏனென்றால் நான் குடும்பத்திற்கு மட்டுமே குத்தகைக்கு விட்டிருந்தேன். இந்த நபர் அவர்களுடன் வாழ்கிறார் என்பது கூட எனக்குத் தெரியாது, ”என்று ஹர்ப்ரீத் சாப்ரா வெள்ளிக்கிழமை கனடிய ஊடகங்களிடம் கூறினார்.
அமரக்கோன் அந்த வீட்டில் வசிப்பது தனக்குத் தெரியாது என்று சாப்ரா கூறுகிறார்.
சொத்து உரிமையாளரின் கூற்றுப்படி, விக்கிரமசிங்கவின் குடும்பம் கடந்த கோடையில் Barrhaven வீட்டிற்கு குடிபெயர்ந்தது. தந்தை முதலில் கனடா வந்ததாகவும், தனது மனைவி குழந்தைகளுடன் வருவதற்காகக் காத்திருந்ததாகவும் அவர் கூறுகிறார்.
கொலை நடந்த வீட்டின் உரிமையாளர் உயிர் பிழைத்த தந்தையை “மிக நல்ல பையன்” மற்றும் நல்ல குத்தகைதாரர் என்று விவரிக்கிறார்.
“அவர் தனது வாடகையை எப்பொழுதும் சரியான நேரத்தில் செலுத்தும் ஒரு வகையான குத்தகைதாரர் … அவர் வீட்டை நன்றாக கவனித்துக்கொண்டார்,” என சாப்ரா கூறினார்.
“இதற்குப் பிறகு என்னிடம் வார்த்தைகள் கூட இல்லை. அதிர்ச்சி, மன அழுத்தம், குடும்பத்திற்கான உணர்வுகள்,” என்று அவர் மேலும் கூறினார்.
கனடாவின் பௌத்த பேரவையின் பணிப்பாளர் நாரத கொடித்துவக்கு, ஒட்டாவா மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை சிகிச்சை பெற்று வரும் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடினார்.
“அவர், ‘ஆமாம், என் வாழ்க்கை சீரழிந்துவிட்டது’ போன்ற விஷயங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால், அந்தக் குற்றத்தைச் செய்தவன் ஒரு சிறுவன், அவனையும் நினைத்துப் பார்க்க வேண்டும்,” என்று கொடித்துவக்கு கூறினார்.
டி சொய்சா, விக்கிரமசிங்கவின் அறையொன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததாக கொடித்துவக்கு தெரிவித்தார்.
“குடும்பத்தினர் குற்றம் செய்த அந்த இளைஞனுக்காகச் செய்த கருணையுடன் கூடிய செயல்கள் உள்ளன. ஒரு வாரத்திற்கு முன்பு அந்த இளைஞனின் பிறந்தநாள் நிகழ்வை அவர்கள் நடத்தினார்கள்” என்று கொடித்துவக்கு கூறினார்.
காயமடைந்த தந்தையை வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை மீண்டும் மருத்துவமனையில் சந்தித்ததாக மற்றொர துறவி சுனீதா கூறினார்.
புதன்கிழமை இரவு பணி முடிந்து வீடு திரும்பிய தனுஷ்க விக்கிரமசிங்க தனது மனைவி மற்றும் குழந்தைகளின் சடலங்களைக் கண்டதாக பிக்கு கூறுகிறார்.
விக்கிரமசிங்க வீட்டினுள் நுழைந்தபோது, தாக்குதலாளி வீட்டுக்குள் பதுங்கியிருந்து – அவரது கைகளையும் முகத்தையும் வெட்டினார் என்று சுனீதா கூறுகிறார்.



