நள்ளிரவு முதல் சில உணவுப்பொருட்களின் விலைகள் குறைந்தன

Date:

மின்சாரக் கட்டணக் குறைப்பு காரணமாக முன்னர் அதிகரிக்கப்பட்ட உணவக உணவுப் பொருட்களின் விலைகளும் மார்ச் 5 நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின்  தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்தார். உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக, அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தினால் கடந்த சனிக்கிழமை முதல் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டன.

அதன்படி, ஒரு கப் தேநீரின் விலை 5 ரூபாவாலும், ஒரு கப் பால் தேநீரின்  விலை 10 ரூபாவாலும், சாதம் மற்றும் மதிய உணவுப் பொதி ஒன்றின் விலை 25 ரூபாவாலும், பிரைட் ரைஸ் மற்றும் கொத்துவின் விலை 50 ரூபாவாலும், சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டிருந்தன.

எவ்வாறாயினும், மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டதன் காரணமாக நேற்று (5) நள்ளிரவு முதல் மீண்டும் உணவக உணவுப் பொருட்களின் விலைகள் முன்னைய விலைகளுக்கு குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சாரக் கட்டணங்களை 21.9 வீதத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...

LAUGFS எரிவாயு விலையும் குறைந்தது!

LAUGFS எரிவாயு நிறுவனம், இன்று நள்ளிரவு முதல் வீட்டு உபயோக எரிவாயு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்