சாவகச்சேரியில் இ.போ.ச பேருந்து மோதி உயிரிழந்த பாடசாலை மாணவனின் இறுதி நிகழ்வு!

Date:

கடந்த வெள்ளிக்கிழமை மீசாலை ஐயா கடைச் சந்திப் பகுதியில் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் உயர்தர வகுப்பு மாணவனான சி.பரணிதரனுக்கு பாடசாலை மாணவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை மேற்படி மாணவன் பாடசாலையில் இடம்பெற்ற விளையாட்டுப் பயிற்சியை முடித்து விட்டு வீடு நோக்கி துவிச்சக்கரவண்டியில் செல்லும் போது இலங்கை போக்குவரத்துசபை பேருந்து மோதி உயிரிழந்திருந்தார்.

மாணவனின் மரணச்சடங்கு இன்று (05) அவரது வீட்டில் இடம்பெற்று தனங்கிளப்பு வீதியில் உள்ள கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு தகனத்திற்காக எடுத்துச்செல்லப்பட்ட சந்தப்பத்தில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி மற்றும் டிறிபேர்க் கல்லூரி மாணவர்கள் அஞ்சலி செலுத்தி வழியனுப்பி வைத்தனர்.

சக மாணவர்கள் அவரது உடலை தோளில் சுமந்துகொண்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

காமெனியின் இறுதிச் சடங்குகள் வாரம் தொடங்கியது; தெஹ்ரானில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய குண்டுவீச்சுகளால் கொல்லப்பட்ட ஈரானின் மறைந்த உச்சத் தலைவர்...

பணப்பரிமாற்றம் நடந்தபோது விஜயதாச ராஜபக்ஷவும் டுபாயிலிருந்தார்!

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, கூறப்படும் இலஞ்சம் பெறப்பட்ட...

LAUGFS எரிவாயு விலையும் குறைந்தது!

LAUGFS எரிவாயு நிறுவனம், இன்று நள்ளிரவு முதல் வீட்டு உபயோக எரிவாயு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்