மடுவில் தேக்கு மரங்களை வெட்டி சென்ற மர்ம நபர்கள்: போக்குவரத்தும் பாதிப்பு!

Date:

மன்னார் மடுவில் வீதியோரம் இருந்த வளர்ந்த தேக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி குற்றிகளாக ஏற்றிச்சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று தினம் நள்ளிரவு மடு தேவாலயம் – மடு வீதி சந்திக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள தேக்கு மரங்களைளே மர்ம நபர்கள் வெட்டி வாகனத்தில் ஏற்றி சென்றுள்ளனர் என கூறப்படுகிறது.

இவ்வாறு அவர்களால் வெட்டப்பட்ட மரத்தின் குற்றிகளை மர்ம நபர்கள் ஏற்றி சென்ற நிலையில் கிளைகள் வீதியிலேயே கிடந்திருக்கின்றது.

இதனால் நேற்று (04) காலை குறித்த வீதியில் வாகனங்கள் பயணிக்க முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதே வேளை மடு தேவாலயத்திற்கு சில கிலோ மீற்றர் தூரத்தில் வீதி ஓரம் வளர்ந்திருக்கும் பெறுமதியான தேக்கு மரங்கள் இவ்வாறு பல தடவைகள் மர்ம நபர்களால் வெட்டி எடுத்து செல்லப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை மர்ம நபர்கள் தேக்கு மரங்களை வெட்டிய பகுதியில் இருந்து சில மீற்றர் தூரத்தில் இராணுவ முகாம் இருப்பதாகவும், சில கிலோ மீற்றர் தூரத்தில் அதாவது மடு ரோட் சந்தியில் மடு பொலிஸ் நிலையம் இருப்பதாகவும், அதற்கு அருகில் மடு ரோட் சந்தியில் இராணுவ சோதனை சாவடி இருப்பதாகவும் மறு புறம் சில கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் மடு தேவாலய சந்தியில் பொலிஸ் காவலரணும் அமைந்துள்ளது.

இவ்வாறான நிலையில்தான் வீதியோரம் இருக்கும் பெறுமதியான தேக்கு மரங்கள் நள்ளிரவில் வெட்டப்பட்டு குற்றிகளாக இவ்வாறு பல தடவைகள் ஏற்றி செல்லப்பட்டுள்ளது.

இராணுவம், பொலிஸ் என இவற்றை கடந்து வீதியோரம் இருக்கும் மரத்தை சாதாரண மனிதர்கள் வெட்டி ஏற்றி செல்வதற்கு வாய்ப்பில்லை என பொது மக்கள் கருதுகின்றனர்.

இதே வேளை மடு தேவாலயத்தை அண்மித்த பெரியபண்டிவிரிச்சான் காட்டுபகுதிகளிலும் மற்றும் மடு – பரப்புகடந்தான் வீதிக்கு அருகில் இருக்கும் காட்டு பகுதிகளிலும் பெறுமதி வாய்ந்த மரங்களான முதிரை, பாலை போன்ற மரங்கள் வெட்டப்பட்டு குற்றியாக்கி கடத்தி செல்லப்படுகிறது.

பெரும்பாலும் இவ்வாறு வெட்டப்படும் குற்றிகள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படுகின்றது.

இதற்கு பொலிஸார் உட்பட யாரும் இதுவரை பெரியளவில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகிறது.

எனவே இந்த மரக்கடத்தல் காரர்களிடம் இருந்து எமது வளங்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 120 ஜோடிப் புறாக்கள்

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் கடற்கரைக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 120 ஜோடிப்...

நீர்கொழும்பிலிருந்து யாழ் சிறைக்கு மாற்றப்பட்ட 60 கைதிகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகளில் 60 பேர்...

நீர்கொழும்பு சிறைக்குள் ஏன் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது?: சிறைச்சாலை ஆணையாளர் விளக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (06) ஏற்பட்ட சம்பவத்தின் போது பாதுகாப்புப் பிரிவினர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்